தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கலந்துக்கொண்ட  நிமாலி லியனாராச்சி புதிய தேசிய  சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மூன்றாவது நாளான இன்று பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியின் போதே குறித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர் போட்டி தூரத்தை 2 நிமிடங்கள் மற்றும் 3.5 செக்கன்களில் நிறைவுசெய்து இசாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் 1992 ஆம் ஆண்டு போட்டி தூரத்தை 2 நிமிடங்கள் மற்றும் 3.85 செக்கன்களில் நிறைவுசெய்து தம்மிகா மெனிகா சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.