(எம்.எப்.எம்.பஸீர்)
இவ்வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் (டிசம்பர் 20 வரை) நாடளாவிய ரீதியில் 847 சமையல் எரிவாயு சிலிண்டர் சார்ந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு பதிவான சமையல் எரிவாயு சிலிண்டர் சார்ந்த அனர்த்தங்கள் காரணமாக 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 16 பேர் காயமடைந்தனர். 18 சம்பவங்களின் போது பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பான விசாரணை மற்றும் தீர்வுகளை முன் வைப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் அறிக்கை ஊடாக இது தெரியவந்துள்ளது.
இந்த 847 சம்பவங்களில், 797 சம்பவங்கள் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சம்பந்தப்பட்ட அனர்த்தங்கள் எனவும், 50 சம்பவங்கள் லாப் எரிவாயு சிலிண்டர் தொடர்பானவை எனவும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இன்று வரை 18 சொத்து சேதங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு 18 எரிவாயு சிலிண்டர் தொடர்பிலான அனர்த்த சம்பவங்களும், 2020 ஆம் ஆண்டில் 31 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாண்டு அச்சம்பவங்கள் 847 ஆக அதிகரித்துள்ளது.
அண்மையில் பதிவான எரிவாயு சிலிண்டர் சார்ந்த அனர்த்தங்களில் 299 சம்பவங்கள், மக்கள் எரிவாயு கசிவு ஏற்படுகிறதா என சவர்க்கார நீர் உள்ளிட்டவற்றை கொண்டு சோதனைச் செய்ய முற்பட்டதால் ஏற்பட்டது என சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பான விசாரணை மற்றும் தீர்வுகளை முன் வைப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் உறுப்பினர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா திபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சுமார் 40 இலட்சம் பேர் சமையல் எரிவாயுவை பயன்ப்படுத்துவதாக சுட்டிக்காட்டும் அவர், வருடாந்தம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு அடுப்புகள் உள்ளிட்டவை திருத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
அதன்படி 2021 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2021 டிசம்பர் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வாயு அடுப்புக்களின் முகப்பு கண்ணாடி வெடிப்பு மற்றும் அடுப்பு வெடிப்புச் சம்பவங்களாலேயே அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மொத்தமாக பதிவாகியுள்ள எரிவாயு சிலிண்டர் சார்ந்த சம்பவங்களில் 477 சம்பவங்கள் வாயு அடுப்புக்களின் கண்ணாடி முகப்பு வெடிப்பு மற்றும் வாயு அடுப்புக்கள் வெடித்ததினால் பதிவாகியுள்ளதாக ஜனாதிபதியால், சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பான விசாரணை மற்றும் தீர்வுகளை முன் வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கூறுகிறது.
இதனைவிட இக்காலப்பகுதியில், வாயு விநியோக குழாய் சேதமடைந்தமையினால் 52 சம்பவங்களும், ரெகியூலேடர் சேதமடைந்தமையால் 15 சம்பவங்களும், வாயு கசிவு காரணமாக 299 சம்பவங்களும், அதிக வெப்பம் காரணமாக 3 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதன்போது வாயு சிலிண்டர்களுக்கு சேதம் ஏற்பட்ட சம்பவம் ஒன்றே ஒன்று பதிவாகியுள்ளது.
தலாத்துஓயா, மருதானை, வெலிக்கடை, கொட்டாவ, கந்தப்பளை, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் எரிவாயு சிலின்டர் சார்ந்த சம்பவங்கள் காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த மார்ச் 20 ஆம் திகதி தலாத்து ஓயவில் ஏ.எம்.ஜி. ஹீன் மெனிகேவும், மார்ச் 24 ஆம் திகதி மருதானையில் கஹவத்த கமகே லசந்த சந்ரகுமரவும், செப்டம்பர் 24 ஆம் திகதி வெலிக்கடையில் தினுக்க நாரங்கொடவும்,செப்டம்பர் 15 ஆம் திகதி கொட்டாவையில் பி.இமாஷா மதுஷானியும், ஒக்டோபர் 21 இல் கந்தப்பளையில் ரங்கசாமி விஸ்வநாதனும், நவம்பர் 19 இல் மாத்தளையில் எம்.எம். சந்ரகுமரவும், டிசம்பர் முதலாம் திகதி கண்டியில் பி.டி.பி. அசோக சோமசிறியுமே எரிவாயு சிலிண்டர் சார் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களாவர்.
இதனைவிட, இந்த ஒரு வருட காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காலப்பகுதியில், 23 சமையல் எரிவாயு சிலிண்டர் சார்ந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாரஹேன்பிட்டியில் 2, கருவாத்தோட்டத்தில் 1, கொள்ளுபிட்டியில் 2, வெள்ளவத்தையில் 1, கிருலப்பனையில் 3, கொம்பனித் தெருவில் 1, ஆட்டுப்பட்டித் தெருவில் 1, மருதானையில் 3, மட்டக்குளியில் 2, தெமட்டகொடையில் 1, முகத்துவாரத்தில் 1, கிராண்பாஸில் 3, கொட்டாஞ்சேனையில் 2 என அந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM