பதுளையில் இன்று மேலதிக வகுப்புகளுக்காக சென்ற பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி, காணாமல் போயுள்ளதாக குறித்த மானவியின் தாய் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 17 வயது லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
பதுளை நகரில் உள்ள மேலதிக வகுப்பொன்றிற்கு, நேற்று 19.12.202 சென்ற குறித்த மானவி வீடு திரும்பவில்லையென்றும், பொலிஸ் நிலையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதுளை – கலன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி மேலதிக வகுப்பிற்கு எடுத்து சென்றதாக கூறப்படும் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியன பதுளை - கோபோ பகுதியின் நீர் நிலையொன்றின் அருகே, (தெப்பக்குளம்) இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தோட்ட இளைஞர்கள் குழுவொன்று, மேற்படி நீர் நிலையில் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இது வரை மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
இதையடுத்து, மாணவியின் தாயாரும், உறவினர்களும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிடம் செய்த புகாரையடுத்து, காணாமல் போன மாணவி, நீர் நிலையில் விழுந்திருக்க கூடுமென்ற சந்தேகம் எழுப்பட்டிருப்பதால், அம் மாணவி குறித்த தேடுதல்களை உடன் மேற்கொள்ளுமாறு, பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
அத்துடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நேரடியாகவும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, பதுளை பொலிஸ்சார் சுழியோடிகள் சகிதம், குறித்த நீர் நிலை பகுதிக்கு சென்றுள்ளனர். இம் மாணவி குறிப்பிட்ட நீர் நிலையில் விழுந்து தற்கொலை செய்துள்ளாரா அல்லது திசை திருப்பும் வகையில் அவரது புத்தகப்பை பாதணிகள் ஆகியவற்றை நீர் நிலை அருகில் போடப்பட்டு கடத்தப்பட்டாரா என்ற வகையில் பொலிசார் இரு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அநத மாணவி குறித்து தொடர்ந்தும் பதுளை பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM