யாழில் வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டவர் கைது

By T Yuwaraj

20 Dec, 2021 | 12:54 PM
image

யாழ்.ஊர்காவற்றுறை - நாரந்தனை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 26 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சஹ்ரானின் இரகசிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றொரு இளைஞன் கைது | Virakesari.lk

கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி நாரந்தனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், தாக்குதலாளி தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் , கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right