தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தவைராக மஹிந்த கம்மன்பில நியிமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் நீதிபதி சலீம் மர்சூக், தியாகநாதன் செல்வகுமாரன், சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சிஹேவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (30) ஜனாதிபதியினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.