(எம்.மனோசித்ரா)

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களுடன் பயணித்த பஸ்ஸொன்று பதியத்தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

Articles Tagged Under: விபத்து | Virakesari.lk

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அதிக வேகத்தில் பஸ்ஸை செலுத்தியமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.