மல்வத்த மகாநாயக்கர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான  கடிதமொன்றை  புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரிடம் கையளித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர்  லால் விஜேநாயக்க, மல்வத்த மகாநாயக்கரிடம் ஆசிர்வாதம் பெற சென்ற போது குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிர்வாதம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லால் விஜேநாயக்க, புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிடப்பட்டு வருவதோடு, இனவாத கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர் என்றார்.