2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் பிளே-ஆஃப் சுற்று போட்டிகளில் ஆரம்ப நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகள் டிசம்பர் 19 ஆம் திகதி (இன்று) தொடங்கும்.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த பிளே-ஆஃப் சுற்றின் முதல் ஆட்டாமாக நடைபெறும் வெளியேற்றல் போட்டி மாலை 4.00 மணிக்கு தொடங்கும்.

இப் போட்டியில் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த மற்றொரு பிளே-ஆஃப் சுற்று ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்கும்.

இப் போட்டியில் காலி கிளடியேட்டர்ஸ், ஜப்னா கிங்ஸை எதிர்கொள்ளும்.

பிளே-ஆஃப்  சுற்றின் அனைத்துப் போட்டிகளும் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும்.

Image