கண்டி  - பன்வில பிரதேச சபைக்குற்பட்ட அலகொல தோட்ட மக்கள் தங்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளவுயர்வை விரைவில் பெற்றத்தருமாறு கோரி பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது அலகொல தேயிலை தொழிற்சாலைக்கு அருகில்  இன்று (30) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது தங்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுத்தருவதற்கு நாம் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக வரும் மலையக அரசியல்வாதிகள் எமது தேவைகளை நிறைவேற்றுவதில் மாத்திரம் தயக்கம் காட்டுகின்றனர்.

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வினை பெற்றுக்கொடுத்துள்ள அரசாங்கம் தினமும் மழையிலும், வெயிலிலும் பாடுபட்டு உழைக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியது எமக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கே ஆகும். இதனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் தீர்வினை பெற்றுத்தருவதோடு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது அவசிமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அலகொல  தோட்டத்தினை சேர்ந்த நூற்றுக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.