(லேகேஸ்)

கண்டி  செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று (29) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்திவ் காயமடைந்த  மாணவத் தலைவரை கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து,  குறித்த 10ஆம் வகுப்பு மாணவன்  கைதசெய்யப்பட்டு கட்டுகஸ்தோட்டை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.