எம்மை தாராளமாக அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கலாம் - உதய கம்மன்பில அதிரடி

Published By: Digital Desk 3

18 Dec, 2021 | 04:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை காட்டிலும் மனசாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றினை நாடியுள்ளோம். யுகதனவி விவகாரத்தில் மூன்று அமைச்சர்களின் செயற்பாடு தவறென ஜனாதிபதி கருதினால் எம்மை தாராளமாக அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கலாம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளமை சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

நாட்டுக்கும்,பொது மக்களுக்கும் சாதகமான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டியது அமைச்சரவையின் பொறுப்பாகும்.

அமெரிக்க மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்தை வலுவிழக்கு செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு சாதகமாக அமைச்சரவை அந்தஸத்துள்ள மூன்று அமைச்சர்கள் சத்தியகடதாசி சமர்ப்பித்துள்ளமை அமைச்சரவை கூட்டுப்பொறுப்பிற்கு முரண் என்பதை நன்கு அறிவோம்.

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை காட்டிலும் மனசாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் யுகதனவி விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும்,அரசாங்கத்தின் கொள்கையினையும் பாதுகாத்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமக்குண்டு.

அமைச்சரவை தீர்மானத்திற்கு முரணாக செயற்படுகையில் அமைச்சு பதவி பறிபோகும் என்பதை நன்கு அறிந்தே யுகதனவி விவகாரத்தில் நாட்டுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எமது செயற்பாடு தவறு என ஜனாதிபதி கருதினால் எம்மை அமைச்சு பதவிகளில் இருந்து தாராளமாக நீக்கலாம்.

நான் உள்ளிட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயகார ஆகியோர் யுகதவனி ஒப்பந்தம் தொடர்பில்  உயர்நீதிமன்றிற்கு சமர்ப்பித்த சத்தியகடதாசியின் உள்ளடக்கம் பொய் எனில் அரசாங்கம் சார்பில் சட்டமாதிபர் உயர்நீதிமன்றிற்கு சமர்பித்த சத்தியகடதாசியின் உள்ளடக்கம் உண்மை,எமது சத்தியகடதாசியின் உள்ளடக்கம் உண்மையாயின் சட்டமாதிபர் சமர்ப்பித்த விடயம் பொய்யாகும்

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இரு தரப்பிலும் ஒரு தரப்பினர் சமர்ப்பித்த சத்தியகடதாசியின் உள்ளடக்கம் பொய். நீதிமன்றிற்கு பொய்யான விடயங்களை சமர்ப்பிப்பது 3 வருட கால தண்டணைக்குரிய குற்றமாகும். ஆகவே இவ்விடயத்தில் யாரை சிறைக்கு அனுப்ப வேணடும் என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு...

2025-02-13 17:46:58