அம்பாந்தோட்டை பண்டாராகிரிய பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞர்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உத்தரவினை அம்பாந்தோட்டை நீதிமன்றம் இன்று (30) பிறப்பித்துள்ளது.

குறித்த இளைஞர் மற்றும் அவரது சகோதரர்கள் ஆகிய மூவரும் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர் பொலிஸ் காவலில் இருந்த போது காணாமல் போனதாக பொலிஸ் நிலையித்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் திக்கெல்ல பகுதியிலுள்ள விகாரையின் பிக்கு ஒருவரின் தகவலுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த இளைஞர் மற்றும் அவரது சகோதரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.