ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகளை முன்னெடுப்பதற்கு சீனா செய்தது என்ன ?

Published By: Digital Desk 4

18 Dec, 2021 | 08:42 AM
image

பெய்ஜிங் (சின்ஹுவா) சீனா அதன் யதார்த்தம், கலாசாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயக விழுமியங்களை செயலுருப்படுத்துவதில் மரபுரிமையை அடியொற்றியதும் புத்தாக்கமானதுமான பாதையொன்றை ஆராய்ந்துகொண்டிருப்பதுடன் நாட்டு மக்களை ஆசான்களாகக்கொண்ட ' கணிசமான ஜனநாயகம்' ஒன்றையும் முன்னெடுக்கிறது.

சீனா கடைப்பிடிக்கும்  ஜனநாயகம் ஒரு முழுமையான செயன்முறை ஜனநாயகமாகும்; அது சகல அம்சங்களையும் சகல நடைமுறைகளையும் தழுவியதாக இருக்கிறது.

அந்த ஜனநாயகம் ஐக்கிய செயன்முறையை முன்னெடுப்பதுடன் விளைபயன்களை அடிப்படையாகக் கொண்டது; சரியான வழிமுறை  ஜனநாயகம்; நேரடி ஜனநாயகம் என்றும் மறைமுக ஜனநாயகம் என்றும் சொல்லலாம்.மக்களின் ஜனநாயகம் அரசின் விருப்பாற்றலையும் கொண்டதாகும்.

ஒரு மேம்பட்ட நடுநிலையான கட்சி, மக்களை மையமாகக் கொண்ட கோட்பாடு மற்றும் அபிவிருத்தி மீது கவனத்தை குவிக்கின்ற உலகப்பார்வை ஆகியவையே வலிமையான ஆட்சிமுறைக்கான சீனாவின் அணுகுமுறையின் மூன்று தலையாய அம்சங்களாகும்;

 ## ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை விசுவாசமாகவும் புத்தாக்கமாகவும் கடைப்பிடிக்கின்ற ஒரு நாடு என்ற வகையில் சீனா மனிதகுலத்துக்கு பொதுவான விழுமியங்களை முன்னெடுப்பதற்காக நான்கு கோட்பாடுகளை வழங்குகிறது.

அவை விளைபயன்களை அடிப்படையாகக்கொண்ட, சுயநிர்ணயத்தை மதிக்கின்ற,நிதானமான வேகத்தைக் கொண்ட ,எப்போதும் முன்னேறுகின்ற கோட்பாடுகளாகும்.

மனித குலத்துக்கு பொதுவான விழுமியங்களின் பின்புலத்தில் ஜனநாயகம்,சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சீனாவின் அணுகுமுறை குறித்து சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் 'நவசீன ஆராய்ச்சி'( new China Research ) என்ற சிந்தனை குழாம் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.

   " மனித குலத்துக்கு பொதுவான விழுமியங்களை முன்னெடுத்தல் ; ஜனநாயகம்,  சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை தொடர்பான சீனாவின் அணுகுமுறை"என்ற தலைப்பைக் கொண்ட இந்த அறிக்கை நாட்டை மக்கள் நிருவகிக்கும் சீனாவின் ஜனநாயக நடைமுறையின்  தர்க்கம் மீது ஒரு நோக்கை தருகிறது.

    சீனாவின் முழுமையான  செயன்முறை ஜனநாயகம், நிறுவனங்களின் பயனுறுதி மற்றும் மனிதகுலத்துக்கு பொதுவான விழுமியங்களை செயலுருப்படுத்துவதற்காக சீனாவின் ஆராய்ச்சி வழங்கியுள்ள பயனுறுதியுடைய நுண்ணோக்குகள் பற்றியெல்லாம் அறிக்கை விளக்குகிறது.கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவும் கொவிட் -- 19 பெருந்தொற்று, பெருகிவரும் செல்வ இடைவெளி,துருவமயப்பட்ட அரசியல், சில நாடுகளில் ஆட்சிமுறையின் தோல்வி என்று ஒரு நூற்றாண்டில் காணாத மாற்றங்களை உலகம் இப்போது அனுபவித்துக்கொணடிருக்கிறது. மனிதகுலத்துக்கு பொதுவான விழுமியங்களை முன்னெடுப்பதற்காக ஜனநாயக நடைமுறை மற்றும் சுதந்திரம், மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பிலான அதன் ஆராய்வில் சீனா சரியாக செய்திருப்பது என்ன?

  நாட்டை நிருவகிக்கும் மக்கள்

  சீனா அதன் சொந்த யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டு ஜனநாயக விழுமியங்களை செயலுருப்படுத்துவதில் மரபுரிமையை அடியொற்றியதும் புத்தாக்கமானதுமான பாதையை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது.அத்துடன் அது நாட்டின் ஆசான்களாக மக்களைக் கொண்ட ' கணிசமான ஜனநாயகம்'ஒன்றையும் முன்னெடுக்கிறது.

   சீனாவின் ஜனநாயக வளர்ச்சி  மக்களின் மகிழ்ச்சி, தேசிய சுபீட்சம்,தேசிய புத்திளமையூட்டல் ஆகியவற்றை செயலுருப்படுத்துவதில் விளைபயன்களை நோக்கமாகக்கொண்ட இலக்கு, உலகில் அதிகூடிய சனத்தொகையைக் கொண்ட அபிவிருத்தியடைந்துவரும் நாடு என்ற கள யதார்த்தம், 5000 வருடகால நாகரிகம் என்ற வரலாற்று முக்கியத்துவ பரிமாணம்  ஆகியவற்றை ஒன்று சேர்க்கிறது.

  சீனா அதன் வேர்களை நினைவுபடுத்துவதன் மூலமும் வெளிச் சிந்தனைகளை உள்வாங்கி எதிர்காலத்துக்கு மகங்கொடுப்பதன் மூலமும் தொடர்ச்சியான ஒன்றிணைவின் மூலமும் புதிய வடிவிலான ஜனநாயகத்தை அமைத்திருக்கிறது என்று அறிக்க கூறுகிறது.

  சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான பல்கட்சி ஒத்துழைப்பு மற்றும் அரசியல் கலந்தாலோசனை,பிராந்திய இனத்துவ சுயாட்சி மற்றும் சமூக மட்ட சுயாட்சிமுறை என்ற மூன்று அடிப்படை அரசியல் முறைமையும் மக்கள் காங்கிரஸ்களின் அடிப்படை அரசியல் முறைமையும் மக்களினால் நாடு நிருவகிக்கப்படுவதற்கான நிறுவனக் கட்டமைப்புக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன என்றும் அறிக்கை மேலும் கூறுகிறது.

   சீனாவில் மக்கள் காங்கிரஸ் முறைைமை மக்கள் சீனக்குடியரசின் சகல அதிகாரமும் மக்களுக்கே சொந்தமானது என்ற அரசியலமைப்புக் கோட்பாட்டை செயலுருப்படுத்துகிறது. பொதுமக்கள் பல்வேறு மட்டங்களில் அரச அதிகாரத்தின் நிறுவனங்களை அமைப்பதற்கு தங்களது விருப்பாற்றல்களையும் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளை தெரிவுசெய்கிறார்கள். பரந்த பிரதிநிதிதித்துவம் நிர்வாக முறைமையின் முத்திரையாகும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  தற்போதைய தேசிய மக்கள் காங்கிரஸில் 15.7 சதவீதமான பிரதிநிதிகள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சார்பில் அரச அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள் ; 55  இனத்துவ சிறுபான்மைக் குழுக்கள் அவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கிறார்கள்.

  மக்கள் சீனக்குடியரசின் ஜனநாயக நிறுவனங்களின் வடிவமைப்பு குளறுபடிகளை தவிர்ப்பதற்கான தொலைநோக்கை கூட்டிணைக்கிறதுஎன்று கூறும் அறிக்கை ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை நோக்கிய செயல்முயற்சியே சீனாவின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தின் இயக்குசக்தியாக சேவையாற்றுகிறது என்று சுட்டிக்காட்டுகிறது.

  முழுமையான ஜனநாயக செயன்முறை   சீனா கடைப்பிடிக்கும்

ஜனநாயகம் ஒரு முழுமையான செயன்முறை ஜனநாயகமாகும்; அது சகல அம்சங்களையும் சகல நடைமுறைகளையும் தழுவியதாக இருக்கிறது.அந்த ஜனநாயகம் ஐக்கிய செயன்முறையை முன்னெடுப்பதுடன் விளைபயன்களை அடிப்படையாகக் கொண்டது; சரியான வழிமுறை  ஜனநாயகம்; நேரடி ஜனநாயகம் என்றும் மறைமுக ஜனநாயகம் என்றும் சொல்லலாம்.மக்களின் ஜனநாயகம் அரசின் விருப்பாற்றலையும் கொண்டதாகும்.

  சீன மக்கள் அரச ஆட்சிமுறையில் விரிவானமுறையில் பங்கேற்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறார்கள்.சீனாவின் ஜனநாயக தேர்தல்கள்,ஜனநாயக கலந்தாலோசனைகள்,ஜனநாயக தீர்மானம் மேற்கொள்தல் ,ஜனநாயக முகாமைத்துவம் மற்றும் ஜனநாயக மேற்பார்வை ஆகியவற்றின் சகல அம்சங்களையும் அந்த உரிமை உருவகப்படுத்துகிறது. 

  சீனாவின் முழுச்செயன்முறை ஜனநாயகம் மக்களின் சுயாதிபத்தியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய வடிவமாகும். அந்த சுயாதிபத்தியத்தை அதிகாரிகளை தெரிவு செய்வதில், அரச விவகாரங்களை விவாதிப்பதில்,கொள்கைகளை உருவாக்குவதில், அதிகாரத்தை பயன்படுத்துவதை மேற்பார்வை செய்வதில் மக்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

   உதாரணமாக, அதிகாரிகளைத் தெரிவுசெய்யும் சீன வழிமுறையில் நெறிமுறை நேர்மை, தொழில்முறை ஆற்றல் மற்றும் கடந்தகால ஆட்சிமுறைச் செயற்பாடுகள் ஆகியவை தகுதிவாய்ந்த அதிகாரிகளை நிர்ணயிப்பதற்கான ஜனநாயக தேர்தலொன்றில்  தெரிவுக்கு அடிப்படைத் தேவைகளாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  பொதுக்கொள்கையை தீர்மானிக்கும் முழுச் செயன்முறையிலும் பிரைஜைகளின் பங்கேற்பை முழுமையான செயன்முறை மக்கள் ஜனநாயகம் (Whole --process people's democracy)  வலியுறுத்துகிறது.அது கொள்கையை தீர்மானிப்பதற்கு முன்னரும் தீர்மானிக்கும்போதும் தீர்மானித்த பின்னரும் பிரஜைகளின் பங்கேற்பை அனுமதிக்கிறது.தேசிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான ஐந்து ஆண்டுத் திட்டத்தின் வரைகோடுகளும்  ஏனைய கொள்கைகளும்  ஜனநாயக தீர்மானங்களை மேற்கொள்ளும் நடைமுறைகளை விளக்குகின்றன என்றும் அறிக்கை கூறுகிறது. 

  அதேவேளை,அதிகாரத்தை சட்டத்தினால் நடைமுறைப்படுத்துவதை ஒழுங்கமைத்து கட்டுப்படுத்தி மேற்பார்வை செய்வதற்கென்று கட்சிக்குள் மேற்பார்வை,தேசிய மக்கள் காங்கிரஸின் மேற்பார்வை,நீதித்துறை மேற்பார்வை , ஜனநாயக மேற்பார்வை,நிர்வாக மேற்பார்வை, பொதுமக்கள் மேற்பார்வை போன்ற நிறுவனரீதியான ஏற்பாடுகளை சீனா பயன்படுத்துகிறது.   

பயனுறுதியுடைய ஜனநாயகத்துக்கான  உரைகல்

  ஜனநாயகம் மெய்யானதாகவும் பயனுறுதியுடையதாகவும் இருக்கவேண்டும். அது நல்லாட்சியாக மாற்றப்படாவிட்டால், மக்களுக்கு பயன்தராவிட்டால் எவவளவுதான் கவர்ச்சிகரமானதாக தோன்றினாலும் சந்தேகத்துடனேயே நோக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜனநாயகத்தின் செயற்திறன் மக்களில்அதிகப் பெரும்பான்மையினரின் நடைமுறைப் பிரச்சினைகளை அது எவ்வாறு தீர்க்கின்றது என்பதனாலேயே சோதிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐந்துமாத குழந்தைக்கு சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தத வேளை...

2024-07-10 17:04:03
news-image

தேர்தல் வாக்குறுதிகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ள மலையக தனிவீட்டுக்...

2024-07-10 14:42:33
news-image

இலங்கை தமிழர்களுக்கான ஒரு மிதவாதக்குரல்

2024-07-10 11:42:47
news-image

என்ன இந்த 'மார்ஷல்' பதவிநிலை? 

2024-07-10 10:48:07
news-image

தேசிய ரீதியில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஜனாதிபதியின்...

2024-07-10 10:21:25
news-image

புதிய ஜனாதிபதியின் கீழ் ஈரானின் வெளியுறவுக்...

2024-07-09 15:53:45
news-image

ஜனநாயக செயன்முறையில் அரசாங்கத்தின் கடப்பாடு மீதான...

2024-07-08 16:03:50
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் தீவிரமடையும் போஷாக்கின்மை! : ...

2024-07-07 16:54:00
news-image

மூன்று வருடங்களில் பத்தாயிரம் வீடுகள் சாத்தியமா?...

2024-07-07 16:02:29
news-image

பிரான்ஸிய தேசியவாத எழுச்சி

2024-07-07 18:19:37
news-image

முதலீடுகள், வட்டி வருமானம், வரி

2024-07-07 18:19:52
news-image

பிரித்தானிய தேர்தலில் ஈழத்தமிழ் பெண்ணின் வெற்றி

2024-07-07 16:58:15