உலகெங்கிலும் ஒமிக்ரோன் தொற்றுகள் வேகமாக அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி புதிய பிறழ்வுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Sputnik

ரஷ்யாவின் சுகாதார அமைச்சகத்தின் ஒரு பகுதியான கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி ஆனது ஒமிக்ரோனுக்கு எதிராக உயர் வைரஸ் நடுநிலைப்படுத்தும் செயல்பாட்டை (VNA) நிரூபித்தது நிறுவனம் ஒரு டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளது.

அந்த பதிவில், மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரோனுக்கு எதிராக ஸ்புட்னிக் வி சிறந்த வைரஸ் நடுநிலைப்படுத்தல் முடிவுகளைக் காட்டுகிறது.

ஒமிக்ரோன் போன்ற கடுமையான நோய்க்கு எதிராக ஸ்புட்னிக் வி நீண்டகால பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்புட்னிக் வி ஒரு பூஸ்டராக ஒமிக்ரோனுக்கு எதிராக வைரஸ் நடுநிலைப்படுத்தும் செயல்பாட்டை கணிசமாக அதிகரிக்கிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.