logo

புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டவர்- பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

Published By: Vishnu

17 Dec, 2021 | 04:40 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜையாவார். குறித்த வெளிநாட்டு பிரஜை இலங்கையிலேயே சிகிச்சை பெற்று வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறுனார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களுக்கு விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்ட சில மாதிரிகள் , கொவிட் பிறழ்வை இனங்காண்பதற்கான ஆய்வுகூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

அவ்வாறு அனுப்பட்ட மாதரிகளிலேயே புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜையொருவர் ஆவார். இவர் நாட்டுக்கு வருகை தந்து பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் தொற்று நோயியல் பிரிவினால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே அவர் நாட்டிலிருந்து வெளியேறவில்லை என்றும் , இலங்கையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்று நோயியல் பிரிவு எமக்கு அறிவித்துள்ளது.

குறித்த நபர் ஏற்கனவே கொவிட் தொற்றுக்கு உள்ளானவராவார். தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் அவர் செய்து கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைத்துள்ளது. 

இதனால் குறித்த நபர் நாட்டுக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனையை செய்து கொள்ளவில்லை.

எனினும் அவரிடம் குறித்த பி.சி.ஆர். இன்மையால் இலங்கைக்குள் வந்தவுடன் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் போது பெற்றுக் கொண்ட மாதிரியிலேயே அவருக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குறித்த நபர் வேறு ஏதேனும் இடங்களுக்குச் சென்றுள்ளாரா என்பது தொடர்பான தகவல்கள் அவர் தங்கியிருந்த சுகாதார மருத்துல அதிகாரி பிரிவினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம்...

2023-06-09 21:41:14
news-image

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது...

2023-06-09 21:33:40
news-image

கொவிட் - 19 மற்றும் டெங்கு...

2023-06-09 21:27:47
news-image

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் -...

2023-06-09 20:42:16
news-image

குரங்குகளை பயங்கரவாதிகளாக கருத வேண்டும் -...

2023-06-09 20:12:04
news-image

வவுனியாவில் கைதான பாலியல் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய்...

2023-06-09 20:27:48
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 44...

2023-06-09 20:03:54
news-image

சீன சேதன பசளை கொள்வனவு தொடர்பான...

2023-06-09 19:57:17
news-image

நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை...

2023-06-09 20:45:38
news-image

வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்படுத்துபவர்களை...

2023-06-09 16:39:43
news-image

யாழ். மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு...

2023-06-09 17:02:51
news-image

வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை உருவாக்கிய...

2023-06-09 16:12:21