எவன்கார்ட் விசாரணை தொடர்பில் நீதிமன்றில் அஜரான  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட ஏழு பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நிதவான் கிஹான் பிலப்பிட்டி இன்று (30) பிறப்பித்துள்ளார்.

ஒவ்வொருவரும் தலா 2 இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வெளிநாடு செல்லவும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.