இணையவழி ஊடாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதிய சட்ட வரைபு

By Vishnu

17 Dec, 2021 | 03:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இணைய வழி ஊடாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது நிலவும் வர்த்தக சட்ட வரைபை பலப்படுத்துதல் குறித்து உரிய தரப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று  நீதி அமைச்சர் அலி சப்ரி  மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர்  நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஒன்லைன் ஊடாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்நாட்டின் பிரதான வர்த்தக நிறுவனங்களின் பிரதானிகள் பலவரும் கலந்துகொண்டு, ஒன்லைன் ஊடாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவர் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் அதற்கான உறுதியான சட்ட வரைபு ஒன்றின் தேவை குறித்து ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அத்துடன் ஒன்லைன் ஊடாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் இருதரப்பினருக்கும் நியாயம் கிடைக்கும் வகையிலும் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையிலும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் தேவை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

தன் பிரகாரம் இதுதொடர்பில் தற்போது இருக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தும் முறைமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன் புதிய சட்ட வரைபை ஏற்படுத்துவதற்கு இந்த வியாபார நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புபடும்  நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரின் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு குறித்த சட்ட வரைபை தயாரிப்பது தொடர்பாகவும் இதன்போது ஆலோசிக்ககப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33