(எஸ்.என்.நிபோஜன்)

எழுக தமிழ் பேர­ணி­யின்­போது வட­மா­காண முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் முன்­வைத்த கருத்­துக்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பொது­ப­ல­சேனா அமைப்பின் தலை­மையில் பல அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து இன்று வவு­னி­யாவில் மாம­டுவ சந்­தியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டமொன்றை முன்னெடுத்தன.

வடக்கு கிழக்கில் சிறு­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்தி பெளத்த கொள்­கை­களை நாட்டில் நிலை­நாட்ட வேண்டும் என்ற நோக்­கத்தில் இந்த எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­த­வுள்­ள­தாக ஆர்ப்பாட்டத்திலீடுபட்டோர் தெரி­வித்­துள்­ளனர்.

அண்­மையில் வடக்கில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியில் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில், சிங்­கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்­பு­க­ளையும் இணைத்­துக்­கொண்டு இன்று வவு­னியா மாவ­டுவ சந்­தியில் குறித்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.