ஒன்று கூடுவோம் இலங்கையின் பிரதான நிகழ்வுகளின் ஒன்றான 12வது  இளம் தலைவர்களுக்கான மாநாடு மார்கழி 09 தொடக்கம் 11ஆம் திகதி  வரை இடம்பெற்றது.

இதன்  இறுதி நிகழ்வும் விருது வழங்களும் பண்டாரநாயக்கஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது 14 வருட பூர்த்தியைமுன்னிட்டு நிறுவனத்தின் அடைவு மட்டங்களான,  ஒரு மில்லியனுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்தமை , முப்பதாயிரம்மேற்பட்ட அங்கத்தவர்கள், ஒன்றுகூடுவோம் இலங்கையின் வெற்றி பயணத்தின் செயற்பாடுகளால்  ஈர்க்கப்பட்டு 13நாடுகளில் இவ்வமைப்பானது ஸ்தாபிக்கப் பட்டுள்ளமை ,  65000 சர்வதேசஅங்கத்தவர்களை பெருமையுடன் உள்வாங்கி வழி நடாத்துகின்றமை  போன்ற அடைவுகளை கொண்டாடும் முகமாகநடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக   முன்னுதாரணமாக செயற்படுகின்ற சிரேஷ்ட  பிரஜைகள்,இளைஞர்கள், ஒன்றுகூடுவோம் அமைப்பின் முன்னைய அங்கத்தவர்கள் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளில் 2021 ஆண்டிற்கான  விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக கௌரவத்திற்குறிய இலங்கைக்கானபிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹால்ட்டன் அவர்களும், இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் ட்ரீனா யொரான்லிஎஸ்க்கடால் அவர்களும்  கலந்துசிறப்பித்ததுடன் ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் செயற்பாடுகளையும்வெற்றிப்பயணத்தையும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது . இந்த விருது வழங்கள்  நிகழ்வின் முக்கிய நோக்கமானது இலங்கையர்களாக சகஇலங்கையர்களை ஊக்குவிப்பதும் மற்றும் முன்மாதிரிகளை வெளிக்கொணர்ந்து இளம்சமுதாயத்திற்கு சிறந்த முன்னோடிகளை முன்னுதாரணப்படுத்துவதுமாகும். 

அத்தோடு  நிறுவனத்தில் மிக சிறப்பாக செயற்பட்டமாவட்ட  ஒருங்கிணைப்பாளர்களுக்குஆண்டுக்கான சிறந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான  பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 முன்னுதாரணமாக செயற்படுகின்ற சிரேஷ்ட  பிரஜைகளாக கௌரவிக்கப்பட்டோர்,

திரு. சாலியா பீரிஸ்,பேராசிரியர் நீலிக்கா மலிவிகே,திரு. துலித்த ஹேரத்,திரு. சந்திரா ஸ்காப்ட்டர்,திருமதி. ஒட்டாரா குணவர்தன,திரு. ஹார்ப்போ குணரத்ன,திரு. பௌஸுல் ஹமீட், திருமதி.நயனா கருணாரத்ன, திரு.மது ரத்நாயக்க மற்றும் கலாநிதி ஆனந்த ஜெயவிக்ரம 

முன்னுதாரணமாக செயற்படுகின்ற இளம் பிரஜைகளாககௌரவிக்கப்பட்டோர்,

கலாநிதி அஷா டி வோஸ்,திருமதி. மிலானி சல்பிடிகொரல,திரு. தனு இன்னாசித்தம்பி,திரு. அரித்த விக்கரமசிங்க,திரு. அஸாம் அமீன், திருமதி.வாசனா கன்னங்கரா, செல்வி.காவிந்தியா தென்னக்கோன், திரு.பர்வீஸ் மஹரூப், செல்வி, கம்சி குணாரத்னம் 

முன்னுதாரணமாக செயற்படுகின்ற ஒன்றுகூடுவோம் இலங்கையின்முன்னைய அங்கத்தவர்களாக கௌரவிக்கப்பட்டோர்,

செல்வி. நபீலா இக்பால், திரு. பெனிஸ்லஸ் துஷான், செல்வி. நெலுனி திலகரத்ன, செல்வி. சாகரிக்கா வசந்தி, திரு. அர்ஷத் ஆரீப்,திரு. விஜேந்திரன் மோகனதாஸ்,செல்வி. அபேக்சா கொடித்துவக்கு,திரு. அயேஷ் பெரேரா, திரு.அகில ஹெட்டியாராச்சி மற்றும் வைத்தியர் கிரிஸ்ஜித் சேவியர்