பிரிட்டனில் ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக பிரான்ஸ் கூறியுள்ளது.

"கட்டாயமான காரணங்கள்" உள்ளவர்கள் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்கள் இங்கிலாந்தில் புதிய கொவிட்-19 திரிபு தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த தினசரி அளவை எட்டியுள்ளன.

அதன்படி புதன்கிழமை 78,610 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரு நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒமிக்ரோன் தொற்று இதுவரை குறைந்தது 77 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.