சமையல் எரிவாயு நிறுவனங்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் - அமைச்சர் ஜோன்ஸ்டன்

Published By: Vishnu

16 Dec, 2021 | 06:07 PM
image

(எம்.மனோசித்ரா)

சமையல் எரிவாயு பிரச்சினை தொடர்பில் எரிவாயு நிறுவன தலைவர்களும்  அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். அதனை விடுத்து அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் நிறுவனத்தலைவர்கள் செயற்படக் கூடாது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பு- ஹொரன வீதியில் வெரஹர பால நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்ற போது ஊடகங்கங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.

இதன்போது மேலும் கூறிய அவர்,

பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டு வந்தது தவறு என எதிர்த்தரப்பு பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி நிலையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது தவறு என்று கூறுகின்றனர். அவர்கள் கூறுவதைப் போன்று நாட்டில் என்ன அரசியல் நெருக்கடி நிலை உள்ளது?

பாராளுமன்றம் ஜனவரி 11 ஆம் திகதி கூட இருந்தது. அதனை விட மேலும் 6 நாட்கள் காத்திருக்க முடியாதா? கொவிட் காலத்தில் ஒத்துழைப்பு வழங்காத உலகில் ஒரே ஒரு எதிர்க்கட்சி எமது நாட்டிலே உள்ளது. பாராளுமன்றம் கூடிய பின்னர் இவர்கள் எமக்கு ஆலோசனை தருவார்களா? பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படுவது புதிய விடயமல்ல. 

நாட்டில் டொலர் நெருக்கடி காணப்படுகிறது. அதற்காக மக்களை அசௌகரியத்தில் தள்ள மாட்டோம் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21