இரசாய உரத்தினால் மனிதருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய விசேட செயலணி

Published By: Vishnu

16 Dec, 2021 | 04:45 PM
image

இரசாயன உரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விசேட செயலணியொன்றை அமைக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டத்தை அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

May be an image of 2 people, people sitting, people standing and indoor

சுகாதார அமைச்சரும் விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அந்த அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் இசுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த செயலணிக்கு சுகாதாரம் உட்பட பல துறைகளைச் சேர்ந்த சுயேச்சையான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும், அதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல வலியுறுத்தினார்.

கடந்த சில வருடங்களாக இது தொடர்பாக நடத்தப்பட்ட சில ஆய்வுகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை இரசாயன உரப் பாவனையை தடுப்பதற்காக விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு சுகாதாரம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் இது ஒரு தலைசிறந்த தேசிய வேலைத்திட்டம் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செறிவூட்டப்பட்ட அரிசி பாடசாலைகளுக்கு வழங்கும் பணி...

2024-04-19 15:51:28
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49