முன்னாள் நீதிவான் திலின கமகே அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிப்பு

Published By: Vishnu

16 Dec, 2021 | 05:32 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட  முன்னாள் கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகேவை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம்  இன்று உத்தரவிட்டுள்ளது.

Image

கொழும்பு மேல் நீதிமன்ற  தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

6.9 மில்லியன் ரூபா பெறுமதியான ‘சகுரா’ என்ற யானைக்குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் நீதிவான் திலின கமகே உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

உரிமம் இன்றி யானைக்குட்டியை வைத்திருந்தமை, பொய்யான ஆவணங்களை  தயாரிக்க செய்ய சதி செய்தமை மற்றும் சம்பந்தப்பட்ட யானைக்குட்டியை போலி ஆவணங்கள் கொண்டு  பதிவு செய்தமை உள்ளிட்ட 25 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப் பகிர்வுப் பத்திரிகை தாக்கல் செய்யப்ப்ட்டிருந்தது.  

இதில், நீதிவான் திலின கமகே, சந்திரரத்ன பண்டார யடவர, வனவிலங்கு அதிகாரிகளான உபாலி பத்மசிறி மற்றும் பிரியங்கா சஞ்சீவனி ஆகிய நால்வர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கின் ஏனைய மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகவும் சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், பிரதிவாதி தரப்பு சாட்சிகளை  விசாரணை செய்வதற்கு இதன்போது நீதிபதி தீர்மானித்தார்.

அதன்படி அம் மூவர் தொடர்பிலும் இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09
news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023...

2025-02-19 18:49:32
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45
news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக...

2025-02-19 17:34:04
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08