டொலர் நெருக்கடியிலிருந்து மீள அரசாங்கம் போராட்டம் ; நிதி அமைச்சர் பசில் அவசரமாக டுபாய்க்கு விஜயம்

By T. Saranya

16 Dec, 2021 | 12:35 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை அதிகாலை டுபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிகாலை 2.55 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த எமிரேட்ஸ் விமானத்திலேயே நிதியமைச்சர் டுபாய் நோக்கி சென்றுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

நாடு எதிர்க்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை சீர் செய்யும் வகையில் நட்பு நாடுகளிடம் இலங்கை உதவிக்கரம் நீட்டிவருகின்ற நிலையில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளார்.  

அது அவ்வாறிருக்க 2022 ஜனவரி மாதம் என்பது இலங்கைக்கு மிகவும் நெருக்கடியானதும்  தீர்க்கமானதுமான காலப்பகுதியாகும் என பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது. இந்த நெருக்கடியின் பின்னணியாக சர்வதேசத்திற்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணைகளையே குறிப்பிடுகின்றனர். 

சர்வதேச கடன் தவனை கொடுப்பனவாக 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் அந்நிய செலாவணி இருப்பாக நாட்டில் 1.5 பில்லியன் டொலர்கள் மாத்திரமே உள்ளது. 

மறுப்புறம் அரசாங்கத்தின் வருவாய் துறையும் தேசிய உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த ஏற்றுமதி வருமானம் என்பனவும்  எதிர்பார்த்த அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்க வில்லை.

எனவே தான் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதியை கூட அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் மிக மோசமான நிதி நெருக்கடியை வெளிப்படுத்துகின்றது. 

இவ்வர்று இறக்குமதிகள் சூன்யமாகி வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது போகுமானால் தோல்வியடைந்த இராஜ்ஜியமாக இலங்கை சர்வதேசத்திற்கு அடையாளப்பட்டு விடும். எனவே இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் போராடி வருகின்றது. 

இலங்கைக்கு அவசர உதவிகளை செய்ய கூடிய இந்தியா , சீனா உள்ளிட்ட அரபு நாடுகளிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயத்தின் போதும் நிதி ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. 

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நிதியமைச்சர் அங்கு சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டது.

மறுப்புறம் சீனாவிடம் 1,500 மில்லியன் கடனுதவிக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் சாதகமான பதில் கிடைக்க வில்லை. மாறாக அவ்வாறு 1,500 மில்லியன் டொலரை வழங்கினாலும் அத்தொகையினை எந்தவொரு தேவைக்கும் பயன்படுத்த கூடாது. 

அந்நிய செலாவணி இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதவி செய்ய முடியும் என்ற வகையிலேயே சீனா தரப்பின் பதில்கள் அமைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் மிக குறுகிய காலத்திற்குள் பெரும் தொகையான டொலர்களை நாட்டுக்கு கொண்டு வரும் போராட்டத்தில் அரசாங்கம் சிக்குண்டுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் இதற்காக செயற்படுகின்றமை வெளிப்பட்டுள்ளது. இறுதி தெரிவாக மத்திய கிழக்கு நட்பு நாடுகளிடம் உதவிப்பெற்றுக்கொள்ளும் வகையில் அவதானம் செலுத்தியுள்ளது. 

தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாடுமாறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்ற போதிலும் அரசாங்கம் அந்த தீர்மானத்திற்கு இதுவரையில் வர வில்லை. 

ஆனால்  இறுதி தீர்வாக கூட சர்வதேச நாணய நிதியம் அமையலாம் என்பதும் ஆளும் தரப்பின் சிலரது கருத்தாகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை...

2022-10-07 12:10:56
news-image

சர்ச்சைக்குரிய இந்திய நிறுவன மருந்துகள் இலங்கையில்...

2022-10-07 12:10:55
news-image

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம்...

2022-10-07 11:55:23
news-image

வீடொன்றிலிருந்து 6 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்...

2022-10-07 12:15:36
news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 12:12:33
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12