இலங்கை இராணுவ மயமாவதாக கூறும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டு நியாயமற்றது - பாதுகாப்பு செயலாளர்

Published By: Digital Desk 4

15 Dec, 2021 | 09:51 PM
image

(ஆர்.யசி)

இலங்கை இராணுவமயமாவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சர்வதேச தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே  அடிப்படை நியாயமற்றதாகும்.

நீண்டகால இராணுவ சேவையில் ஈடுபட்ட ஒருவர் தனக்குள்ள அனுபவம், தகைமை, அறிவுக்கு அமைய தனது ஓய்விற்கு பின்னரும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்வது தடைசெய்யப்பட வேண்டிய குற்றமா? என கேள்வி எழுப்பும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவமயமாக்கல் என்பது இராணுவ அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே தவிர ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சிலரை அரச பதவிகளுக்கு நியமிப்பதல்ல எனவும் கூறினார்.

Articles Tagged Under: ஜெனரல் கமல் குணரத்ன | Virakesari.lk

கடந்த ஈராண்டு காலத்தில் முப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே எமது பிரதான கடமையாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தலைமையிலான எமது அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பிற்கே முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாது நாடாக முன்னோக்கி செல்ல முடியாது, நாட்டின் சகல செயற்பாடுகளிலும் இது தாக்கத்தை செலுத்தும்.

மக்களுக்கும் எதிர்காலம் இல்லாது போகும். அதனாலேயே நீண்ட காலமாக தேசிய பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டு இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்ட விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து நாட்டையும் பொதுமக்களையும் பாதுகாத்தோம்.

அன்றில் இருந்து நாட்டில் எந்தவித அச்சுறுத்தல் நிலைமையும் இருக்கவில்லை. அதன் பின்னர் பயங்கரவாத அமைப்புகள் சிறுவர்களை படைகளில் இணைத்துக்கொள்ளவில்லை,ஆயுதம் ஏந்தி எந்த பயங்கரவாதிகளும் போராடவில்லை, எந்தவித தாக்குதல்களும் இடம்பெறவில்லை,பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. 

அவ்வாறான நாட்டினை நாம் உருவாக்கிக்கொடுத்தோம். எனினும் 2019 ஆம் ஆண்டில் மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது. நாம் கட்டிக்காத்த தேசிய பாதுகாப்பை மீண்டும் நாசமாக்கினர்.

மீண்டும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தோம் . அவர் ஜனாதிபதியாக வரும் முன்னரே தேசிய பாதுகாப்பிற்கான பரந்த வேலைத்திட்டத்தை நாம் உருவாக்கினோம்.

தேசிய, சர்வதேச ரீதியிலான சவால்களை எதிர்கொள்வது மட்டுமல்லாது, நாட்டின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை வழங்குவதும் எமது கடமையாகும். பாதுகாப்பு படையில் அனுபவம் மிக்க நபர்களை கொண்டு தேசத்தை கட்டியெழுப்பும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்,  பொதுமக்களின் பணத்தில் நாம் சம்பளம் பெறுகின்றோம். ஆகவே தேசத்திற்கும், மக்களுக்கும் எம்மாலான சேவைகளை வழங்க வேண்டும். மாறாக யுத்தத்தில் ஈடுபடுவது மட்டுமே இராணுவத்தின் கடமையல்ல.

இவ்வாறான நிலையில் இராணுவ மயமாக்கல் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இராணுவமயமாக்கல் என்பது இராணுவ அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே தவிர ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சிலரை அரச பதவிகளுக்கு நியமிப்பதல்ல.

இராணுவ அரசாங்கத்தை கொண்ட நாடுகள் முன்னர் இருந்தன. அங்கெல்லாம் எவருக்கும் பேச்சு சுதந்திரம் இருந்ததில்லை. ஜனநாயகம் அறவே இருந்ததில்லை, சுதந்திரம் இல்லாத மக்கள் கூட்டம் இருக்கும் நிலைமையாக அது அடையாளப்படுத்தப்பட்டது.அதுவே இராணுவமயமான தன்மையாக கருதப்பட்டது. இலங்கை விடயத்தில் தவறான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்த வேண்டாம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அண்மையில் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதாவது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை அரச பதவிகளுக்கு நியமித்து நாட்டை இராணுவ மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் 30-35 ஆண்டுகள் இராணுவ சேவையில் ஈடுபட்ட ஒருவர் தனக்குள்ள அனுபவம், தகமை, அறிவுக்கு அமைய தனது ஓய்விற்கு பின்னரும் நாட்டுக்காக சேவை செய்வது தவறா? மூன்று தசாப்தகாலமாக இராணுவத்தில் இருப்பவர் பின்னர் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்வது தடைசெய்யப்பட வேண்டிய குற்றமா? இதனையே நாம் அவர்களிடம் கேட்கின்றோம்.

எனினும் எமக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இதற்கும் முன்னரும் முன்வைக்கப்பட்டது, இனியும் அது அவ்வாறே காணப்படும். ஆனால் எமது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ அல்லது மன திருப்திக்காகவோ எதனையும் செய்யவில்லை. நாம் முன்னெடுத்த அனைத்துமே இந்த நாட்டு  மக்களுக்காக மட்டுமேயாகும்.

போர் குற்றங்கள் குறித்து பாரதூரமான சம்பவங்கள் என எதுவுமே இடம்பெறவில்லை.ஆனால் தனிப்பட்ட ஒரு சில குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.எஅவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எதிர்காலத்திலும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டால் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அதில் எந்த பின்வாங்கலும் இல்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18