எழுக தமிழ் பேர­ணி­யின்­போது வட­மா­காண முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் முன்­வைத்த கருத்­துக்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பொது­ப­ல­சேனா அமைப்பின் தலை­மையில் பல அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து இன்று வவு­னி­யாவில் மாம­டுவ சந்­தியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடத்­த­வுள்­ளன.

வடக்கு கிழக்கில் சிறு­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்தி பெளத்த கொள்­கை­களை நாட்டில் நிலை­நாட்ட வேண்டும் என்ற நோக்­கத்தில் இந்த எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­த­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர்.

அண்­மையில் வடக்கில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியில் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு பொது­பல சேனா அமைப்பு தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதேபோல் விக்­கி­னேஸ்­வ­ரனின் இந்த கருத்­துக்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் சிங்­கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்­பு­க­ளையும் இணைத்­துக்­கொண்டு இன்று வவு­னியா மாவ­டுவ சந்­தியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து தெரி­விக்­கையில்,

வடக்­கிலும் கிழக்­கிலும் சிறு­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்­களின் பாது­காப்பு இன்று கேள்­விக்­கு­றி­யாக அமைந்­துள்­ளது. நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் தமி­ழர்கள் சுதந்­தி­ர­மாக வாழ்ந்து வரும் நிலையில் வடக்கில் மாத்­திரம் சிங்­க­ள­வர்­களை புறக்­க­ணிப்­பது நியா­ய­மற்ற விட­ய­மாகும். ஆகவே சிங்­க­ள­வர்­களின் உரி­மை­க­ளையும் அவர்­களின் பாது­காப்­பையும் பலப்­ப­டுத்­தவே நாம் சகல பெளத்த அமைப்­பு­க­ளையும் ஒன்­றி­ணைத்து போராட தயா­ரா­கி­யுள்ளோம்.

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவில் ஆட்­சியை தக்­க­வைக்க அர­சாங்கம் வாய்­மூடி இருக்­கலாம். ஆனால் நாட்­டுக்­கா­கவும் சிங்­கள பெளத்த மக்­க­ளுக்­கான நாம் பொறு­மை­யாக இருக்க மாட்டோம். நாம் இவ்­வ­ளவு காலமும் அமை­தி­யாக நடப்­ப­வற்றை வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருந்தோம். ஆனால் இனியும் பொறு­மை­காக்க முடி­யாது.

நாட்­டுக்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் எதி­ராக தந்­தி­ர­மாக புலிகள் அமைப்­பு­களும் மேற்­கத்­தேய நாடுகளும் செயற்பட்டு வருகின்றது. ஆகவே நாட்டின் சிங்கள பெளத்த மக்கள் நாட்டுக்காக போராட முன்வரவேண்டும்.அனைத்து பெளத்த சிங்கள அமைப்புகளும் பெளத்த மதத் தலைவர்களும் கட்சி பேதம் இன்று ஒன்றிணைய வேண்டும் என்றார்.