இளையோர் ஆசிய கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியீடு

Published By: Vishnu

15 Dec, 2021 | 11:52 AM
image

19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) ஆசிய கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

ஐ.சி.சி. அகாடமி ஓவல் மைதானத்தில் டிசம்பர் 23 அன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொள்ளும். 

அதே நாளில் இடம்பெறும் மற்றொரு போட்டியில் 2017 ஆம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் சந்திக்கும்.

டிசம்பர் 24 அன்று இலங்கை தனது முதல் ஆட்டத்தில் குவைத்தை சார்ஜாவில் எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் தனது பரம எதிரியான இந்தியாவை டிசம்பர் 25 ஆம் திகதி அன்று ஐ.சி.சி. அகாடமி ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகள் டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெறுவதுடன், இறுதிப் போட்டி டிசம்பர் 31 ஆம் திகதி டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.

எட்டு நாடுகள் பங்கேற்கும் இந்த நிகழ்வில், ஆசிய கிரிக்கெட் அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

குழு ஏ யில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற அணிகளும், குழு பி யில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் இடம்பிடித்துள்ளன.

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31