(ஏ.என்.ஐ)
அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவைக் கொண்ட குவாட் அமைப்பு மிகவும் திறம்பட மற்றும் சிறப்பாக செயற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உலக தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆவர் மேலும் குறிப்பிடுகையில்,
குவாட் அமைப்பு மிகவும் உண்மை தன்மை கொண்டதாகவே உள்ளது. இது மிகவும் திறம்பட நகர்ந்துள்ளது. துல்லியமானதும் சமகால ஏற்பாடுகளை உள்ளடக்கியதாகவே குவாட் அமைப்பு உள்ளது. மறுப்புறம் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா இடையேயான புதிய குழுவானது, பசுமை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே குவாட் ஒரு ஆர்வமுள்ள அமைப்பாகவே இருந்துள்ளது. இது ஒரு புதிய வழியாகும். இந்தியாவிற்கு மாத்திரமல்ல ஏனைய மூன்று பங்குதாரர்களுக்கும் இது சிறப்பானதாகவே உள்ளது. நிலப்பரப்பின் பிரச்சனைகள் பற்றிய மிகவும் விவேகமான பார்வை மற்றும் ஒரு நடைமுறை தீர்வை எவ்வாறு கண்டுபிடிப்பது போன்ற விடயங்களிலும் பிராந்திய அவசர நிலைமைகளில் விரைந்து செயற்பட கூடியதாகவே உள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்ப புலம்பெயர்ந்தோர் மற்றும் இந்திய பொறியாளர்கள் மற்றும் அறிவியல் புலம்பெயர்ந்தோர் உலகளாவிய தொழில்நுட்பங்களை வடிவமைக்கின்றனர். உலகில் தொழில்நுட்ப திறமைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், தொழில்நுட்பத்தை வளர்ச்சியின் மையத்தில் வைக்க வேண்டியது.
மனித வரலாற்றில், தொழில்நுட்பம் இரட்டை முனைகள் கொண்ட வாள் ஆகும். இது முன்னேற்றம் மற்றும் புதிய அச்சுறுத்தல்களின் பார்வைகளைத் திறந்துள்ளது. உலகமயமாக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உலகில், முக்கிய களங்களில் தேர்ச்சி பெறுவது தேர்ச்சியின் சின்னமாகும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM