(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்துடன் 11 பங்காளி கட்சிகள் கூட்டணியாக ஒன்றினைந்துள்ளோம். இருப்பினும் எமது கருத்துக்களுக்கு அரசாங்கத்தில் மதிப்பில்லை. பங்காளி கட்சியின் தலைவர்களுக்கு முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளி கட்சி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த 'மக்கள் பேரவை'மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்பும், கூட்டணியின் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கம் கொள்கைக்கு முரனாக செயற்படுகிறது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டங்களில் சுகாதார தரப்பினரது கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. கொவிட் தொடர்பிலான கூட்டங்களுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தொற்றுநோய் தொடர்பில் சர்வதேசத்திற்கு ஆலோசனை வழங்கிய நான் புறக்கணிக்கப்பட்டேன்.
கொவிட் தாக்கத்தை தொடர்ந்து வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொவிட் தாக்கத்துடன் மக்கள் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்க்கொள்ள வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை தோற்றம் பெற்றுள்ளது. கொவிட் தாக்கத்திற்கு பின்னர் பட்டினி மற்றும் ஏழ்மை உள்ளிட்ட பிரச்சினைகள் சமூகத்தின் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி பணிகளை சற்று தாமதப்படுத்தி பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்து அக்கறை கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளேன்.
எமது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதை பெரு வேதனையுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM