அரசாங்கத்தின் மோசடிகள் வெளியில் வராமல் தடுப்பதற்கே பாராளுமன்ற ஒத்திவைப்பு - பாலித்த ரங்கே பண்டார  

Published By: Digital Desk 4

14 Dec, 2021 | 09:58 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு தங்களுக்கு தேவையான அரசியல் கையாட்களை நியமித்துக்கொள்ளவும் அரசாங்கத்தின் மோசடிகள் வெளியில் வராமல் தடுப்பதற்குமே  ஜனாதிபதி பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

Articles Tagged Under: பாலித்த ரங்கே பண்டார | Virakesari.lk

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசியலமைப்பில் தனக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய பாராளுமன்ற அமர்வை நிறுத்தி வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

 இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் செயற்குழுக்களில் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு மற்றும் அரச கணக்குகள் பற்றிய (கோபா) குழு முக்கியமானதாகும்.

இந்த குழுக்களிலேயே ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. தற்போதைய பாராளுமன்றத்தில் கோப் மற்றும் கோபா குழுக்களில் பேராசிரியர் சரித்த ஹேரத் மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைவராக செயற்பட்டு வந்தனர்.

இவர்களின் தலைமையில் இந்த இரண்டு செயற்குழுவிலும் அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் கூடிய வகனம் செலுத்தப்பட்டிருந்தன.

இதுவரை இவர்கள் மேற்கொண்ட விசாரணை அறிக்கை அரசாங்கத்துக்கு நல்லதில்லை. இந்த நடவடிக்கையில் அதிருப்தியடைந்த ஜனாதிபதி உட்பட ராஜபக்ஷவினர், இதனை நிறுத்துவதற்காகவே பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது. 

அத்துடன் இந்த குழுக்களின் அறிக்கைகள் வெளியில் வந்தால், அது அரசாங்கத்தின் மோசடிகள் மக்களுக்கு தெரிந்துவிடும். தற்போது பாராளுமன்றம் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த செயற்குழுக்களின் நடவடிக்கைகள் அனைத்தும் செயலிழந்து விடுகின்றன.

அதனால் பாராளுமன்ற கூட்டத்தொடரை திடீரென ஒத்துவைத்து, அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நாடகம் என்ன என்பது சிறு குழந்தைகளுக்கும் விளங்குகின்றது.

மேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதும் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு தலைவர்களை தெரிவு செய்யும் போது, ராஜபக்ஷவினரின் ஊழல் மோசடிகளை கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு தேவையான முறையில் செயற்படும்

அரசியல் கையாட்களையே தெரிவு செய்துகொள்வார்கள். அதற்காகவே பாராளுமன்றத்தை மேலதிகமாக ஒருவாரத்துக்கு மாத்திரம் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18