இலங்கை நெருங்கும் ஆபத்து : 'பி' நிலைக்குத் தரமிறக்குவதற்கான முனைப்பில் தேசிய மனித உரிமைகள் சார் கட்டமைப்புக்கள்

Published By: Digital Desk 2

14 Dec, 2021 | 09:48 PM
image

நா.தனுஜா

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் நியமனத்தில் போதியளவு வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்பதுடன் பாரிஸ் கொள்கைகளுக்கு அமைவாகச் செயற்படுவதற்கு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் என்பன போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டி ஆணைக்குழுவை 'ஏ நிலையிலிருந்து 'பி' நிலைக்குத் தரமிறக்குவதற்கு தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவு பரிந்துரை செய்திருக்கின்றது.

உலகநாடுகளின் மனித உரிமைகள் நிறுவனங்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் அவை தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவினால் 'ஏ', 'பி' என்ற அடிப்படையில் தரப்படுத்தப்படும்.

அந்தவகையில் மேற்படி கூட்டிணைவின் கடந்தகாலத் தரப்படுத்தலின்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 'ஏ' என்ற நிலையில் காணப்பட்டது.

இருப்பினும் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்நிலையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவின் ஏற்புடைமை தொடர்பான உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை 'ஏ' நிலையிலிருந்து 'பி' நிலைக்குத் தரமிறக்கம் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவின் 18.1 சரத்தின் பிரகாரம், மேற்படி 'தரமிறக்கப் பரிந்துரை' ஒருவருடகாலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படாது.

அதன்படி எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் ஏற்புடைமை தொடர்பான உபகுழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெறும் வரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 'ஏ' என்ற நிலையிலேயே இருக்கும். இக்காலப்பகுதியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது 'மனித உரிமைகள் குறித்த பாரிஸ் கொள்கைகளுக்கு' அமைவான தமது செயற்பாடுகளை தொடர்பான ஆதாரங்களையும் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்.

 

அதேவேளை தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவின் ஏற்புடைமை தொடர்பான உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கையை 'பி' நிலைக்குத் தரமிறக்குவதற்குப் பரிந்துரை செய்வதற்கான காரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் கையாளப்படும் முறைமை, ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உள்வாங்கப்படும்போது இனரீதியான பன்முகத்தன்மைக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படாமை மற்றும் ஆணைக்குழுவிற்குரிய ஆணைகள் செயற்திறனுடன் பின்பற்றப்படாமை என்பன தொடர்பான தகவல்கள் கடந்த பெப்ரவரி மாதம் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41