காபூலிலிருந்து 10 இந்தியர்கள் உட்பட 104 பேரை சிறப்பு விமானம் மூலம் வெளியேற்றப்பட்டனர். இதன் போது இந்து புனித நூல்கள் உள்ளிட்ட நூல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில்  ஏற்பட்ட  ஆட்சி மாற்றத்தின் பின்னர் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி முழு அளவில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இதனையடுத்து அங்கிருக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக தொடங்கப்பட்ட தேவி சக்தி திட்டத்தின் கீழ் இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சக பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

இந்திய சிறப்பு விமானம் காபூலில் இருந்து புது டில்லிக்கு வந்துள்ளதாகவும்  10 இந்தியர்களையும், 94 ஆப்கானியர்களையும் ஆப்கானிய இந்து-சீக்கிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் அழைத்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 3 கைக்குழந்தைகள் உட்பட 9 குழந்தைகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ்)