மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் காணாமல்போன நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை (13) காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் அதே இடத்தைச் சேர்ந்த செந்தூரன் (வயது-28) என்ற இரண்டு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் நேற்று திங்கட்கிழமை மாலை வரை குறித்த மீனவர் மீட்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM