அரசாங்கம் 2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நவின்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எமக்கு பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க 2000 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டவர்களுள் 90 வீதமானோர் சிங்களவர்களும், 10 வீதமானோர் தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களும் அடங்குவர்.

இதில் அநேகமானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இரட்டை பிராஜவுரிமை வழங்கும் வைபவம் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலமையில் நடைப்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.