கொவிட் தொற்றால் இதுவரை 60 கர்ப்பிணிகளும் 89 சிறுவர்களும் பலி

Published By: Digital Desk 4

13 Dec, 2021 | 08:56 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றின் காரணமாக இதுவரையில் 60 கர்பிணிகளும் , 89 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.

எனவே கொவிட் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த இரு தரப்பினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கையில் கொவிட் வைரஸ் இனங்காணப்பட்ட நாள் முதல் இதுவரையில் 10 500 கர்பிணிகள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் தொற்றுக்குள்ளான பெரும்பாலான கர்பிணிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 95 சதவீதமான கர்பிணிகள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் 30 வயதுக்கு மேற்பட்ட கர்பிணிகளுக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

20 வயதுக்கு மேற்பட்ட கர்பிணிகளுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கான சுற்று நிரூபம் கிடைக்கப் பெற்ற பின்னர் அவர்களும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.

எவ்வாறிருப்பினும் மூன்று கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் கொவிட் தொற்றிலிருந்து 100 வீதம் பாதுகாப்பு பெற முடியாது என சமூக இடைவெளியைப் பேணல், சன நெறிசல் அதிகம் காணப்படும் இடங்களுக்கு செல்லாதிருத்தல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளைக் கடைபிடிப்பது அத்தியாவசியமானதாகும்.

வெளியிடங்களுக்குச் செல்லும் போது அநாவசியமாக சிறுவர்களை அழைத்துச் செல்வதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

காரணம் 18 வயதுக்கு குறைவான 89 சிறுவர்கள் கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். அத்தோடு பாடசாலைகளிலும் கொவிட் பரவல் கனிசமானவு அதிகரித்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனவே பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகம் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33