குடந்தையான்

தமிழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுங்கட்சியாக செயல்பட்ட அரசியல் கட்சி அ.தி.மு.க. அக்கட்சிக்கு தற்போது ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் தலைமை ஏற்றிருக்கும் ‘இரட்டை தலைமை’, இராஜதந்திரமான காரியத்தில் ஈடுபட்டு தான் அக்கட்சியின் தலைமையில் தொடர்வதாக அ.தி.மு.க.வின் மூத்த தொண்டர்கள் மன குமுறலுடன் குற்றம்சாட்டி வருகிறார்கள். 

அ.தி.மு.க. கட்சியின் செயற்குழு கூட்டம் தேர்தல் ஆணைய நிபந்தனைகளுக்கு ஏற்ப அண்மையில் நடைபெற்றது. 

இதில் ‘கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்’ என சட்ட விதிகளை திருத்தம் செய்தனர். 

இந்த அறிவிப்பு, அந்த கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை பாரிய அளவில் மதிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. 

உட்கட்சி ஜனநாயம், கட்சியில் ஜனநாயக செயற்பாடு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பும் ஜனநாயக ஆர்வலர்கள் கூட அ.தி.மு.க.வின் அறிவிப்பை வரவேற்றனர். ஆனால் நடைபெற்ற தேர்தல், வேறுவகையான ‘இராஜதந்திர சதி அரசியல்’ என அக்கட்சியின் மூத்த தொண்டர்கள் தெரிவித்தனர். 

அதிலும் குறிப்பாக ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவை பகடைக்காயாக்கி, கட்சியின் தலைமைப் பதவியை பெற்றதாக பலரும் குற்றம் சுமத்துகிறார்கள்.

கட்சியின் இரட்டை தலைமைகளில் ஒருவரான ஓ.பன்னீர்செல்வம் அளித்த நம்பிக்கை காரணமாக சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, கட்சியின் தலைமைப் பதவி கிடைக்கும் என்றும், கட்சியில் இணையலாம் என்றும்  ஓராண்டிற்கு மேலாக மௌனமாக காத்திருந்தார். 

சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், கட்சியை கைப்பற்றி விடக்கூடும் என்ற அச்சம் எடப்பாடி கே பழனிசாமிக்கும் ஏற்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-12-12#page-23

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/