மலையக மக்களுக்கான காணி உரிமை ; கேட்டவுடன் கிடைத்துவிடுமா?  

By Digital Desk 2

13 Dec, 2021 | 08:44 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

மலையக பெருந்தோட்ட மக்கள் இருநூறு வருடகாலமாக எவ்வாறான வாழ்க்கைநிலையினை கொண்டிருக்கின்றனர் என்பதை அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த  அடிமைத்தனத்தின் சமகாலபோக்குகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளரான டொமொயா ஒபோகாட்டா ஊடகவியலாளர்மாநாட்டில் தெளிவாக கூறியிருந்தார்.

பெருந்தோட்ட மக்கள் தொடர்பான அவரது கருத்துக்கள் பற்றி அரசாங்கத்தின்பேரினவாத சிந்தனை கொண்ட அரசியல் பிரமுகர்கள் எவரும் வாய் திறக்கவில்லையென்பதும்ஐ.நா.அலுவலகத்துக்கு முன்பாக எவரும் உண்ணாவிரதம் இருக்கவில்லையென்பதும்ஆச்சரியப்படக்கூடிய விடயங்களல்ல. 

ஏனென்றால் அவர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மையானவை. அதைவிமர்சிக்கப் போய் இந்த மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டி வருமே என்பதால் மலையக பெருந்தோட்ட சமூகம் பற்றிய அவரது அறிக்கை பற்றிஎவருமே வாய் திறக்கவில்லை. 

இது குறித்து. ‘த இந்து’ பத்திரிகையின் இலங்கை செய்தியாளர் மீராஸ்ரீனிவாசன் “இலங்கையின் மலையகத் தமிழர்கள் மனிதாபிமானமற்ற, இழிவான நிலையில்வாழ்கின்றனர் : ஐ.நா நிபுணர் கருத்து” என்ற தலைப்பில் டிசம்பர் 4 ஆம் திகதி வெளியான  பத்திரிகையில் கட்டுரைஒன்றை எழுதியிருந்தார். 

இதில் விசேடமாக நோக்க வேண்டிய அம்சம் ஆங்கிலத்தில் ‘மலையகதமிழர்கள்’ (Malayaga Tamils ) என்றே தலைப்பிடப்பட்டிருந்தது. 

இந்திய தேசியபத்திரிகையொன்றில் இலங்கை மலையகத் தமிழர்கள் பற்றிய மோசமான வாழ்க்கை நிலைசெய்தியாக வர வேண்டியதன் அவசியம் என்னவென்றால், அம்மக்களின் இந்த நிலைமைக்குஇந்தியாவும் வகை கூற வேண்டும் என்பதாகும். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-12#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right