பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பங்களாதேஷ் நாட்டு பிரதமர் செய்க் ஹசினாவிற்கும் இடையில் தொலைப்பேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தல் உள்ளிட்ட காரணிகள் குறித்து பேசப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கையும், பங்களாதேஷும் ஒன்றினைந்து செயற்படக்கூடிய துறைகள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் நெருங்கிய மற்றும் முக்கியமான நட்பு நாடாக பங்களாதேஷ் வரலாற்று காலம் தொடக்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

நட்புறவினை தொடர்ந்து வரவேற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளார்.