தொண்டமானே நீங்கள் எங்கே ? பெற்று தருவதாக கூறிய 1000 ரூபா எங்கே ? என கோஷம் எழுப்பியும், பதாதைகள் ஏந்தியும் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக கறுப்பு கொடி ஏந்திய வண்ணம் மஸ்கெலியா பகுதி தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சம்பள உயர்வு கோரியே ஆர்ப்பாட்டத்தில் 100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை ஈடுப்பட்டனர்.

இதன்போது தொண்டமான் பெற்று தருவதாக கூறிய 1000 ரூபாய் எங்கே என கோஷங்கள் எழுப்பிய தொழிலாளர்கள் மலையகத்தில் ஏனைய தொழிற்சங்கங்களையும் தாக்கி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.