(எம்.மனோசித்ரா)

கொட்டதெனியாவ பிரதேசத்தில் காணாமல் போன இரு சிறுவர்களை கண்டு பிடிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளது.

கொட்டதெனிய பொலிஸ் பிரிவில் வத்தேமுல்ல , பாதுராகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் , இதுவரையில் குறித்த சிறுவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.

காணாமல் போயுள்ள சிறுவர்களில் ஒருவர் 10 வயதுடைய திஸாநாயக்க முதியலன்சலாகே கவீஷ சந்தகெழும் என்பவராவார். இவர் 4 அடி உயரமுடையவர். காணாமல் போன அன்றைய தினம் இவர் நீல நிற சட்டையை அணிந்திருந்தார்.

மற்றைய சிறுவன் 12 வயதுடைய ஜயசேகர முதலிகே அகில தேதுணு என்பவராவார். இவர் 4 அடி 10 அங்குலம் உயரமுடையவர். இவர் காணாமல் போன தினத்தன்று நீல நிற சட்டை மற்றும் சிவப்பு சிற காட்சட்டையை அணிந்திருந்தார்.

குறித்த சிறுவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8591634 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொட்டதெனிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் , 033-2240050 மற்றும் 033-2272222 என்ற இலக்கங்கள் ஊடாக கொட்டதெனிய பொலிஸ் நிலையத்திற்கும் தெரியப்படுத்தலாம் என்று பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.