மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தரங்கவுக்கும் பெண்கள் பிரிவில் இரேஷாவுக்கும் தங்கம்

Published By: Gayathri

13 Dec, 2021 | 04:30 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து களுத்துறை வரையிலான 33 ஆவது தேசிய இளையோர் மரதன் ஓட்டப் போட்டியில் தரங்க ஹல்பகேவும், கொழும்பிலிருந்து மொரட்டுவை வரையிலான பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் இரேஷா பெர்னாண்டோவும் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.

நேற்றைய தினம் (12) கொழும்பு காலி முகத்திடத்திலிருந்து களுத்துறை மாவட்ட செயலகம் வரையிலான மரதன் ஓட்டப் போட்டியில் மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த தரங்க ஹல்பகே முதலிடம் பிடித்தார். இவர் போட்டித் தூரத்தை 2 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 39 செக்கன்களில் நிறைவு செய்தார். 

No description available.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த ஷஷேன் மாலக்க 2 மணித்தியாலங்கள் 39 நிமிடங்கள் 39 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும்,   களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த நிரோஷ் அஞ்சுல 2 மணித்தியாலங்கள் 52 நிமிடங்கள் 08 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாமிடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.    

No description available.

களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த இரேஷா பெர்னாண்டோ பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியை  1 மணித்தியாலமும் 32 நிமிடங்கள் 37 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றார்.  

No description available.

இப்போட்டியில்  1 மணித்தியாலமும் 34 நிமிடங்கள் 30 செக்கன்களில் நிறைவு செய்த  கம்பஹா மாவட்டத்தின் கயானி  புத்திகா இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும்,  மாத்தறை மாவட்டத்தின் ஹிருணி தில்மினி  1 மணித்தியாலமும் 38 நிமிடங்கள் 47 செக்கன்களில் நிறைவு செய்மு மூன்றாமிடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

No description available.

இதேவேளை, மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்றிருந்த நுவரெலியாவைச்  சேர்ந்த சில்வெஸ்டர் தோமஸ் சார்ள்ஸ் 6 ஆவது இடத்தையும் (3மணி 46 நிமி.51 செக்.), பாலவிக்கேஷ்வரன் செல்வகுமார் 7 ஆவது இடத்தையும் (4மணி 01 நிமி. 27 செக்.), மன்னாரைச் சேர்ந்த அருளாசன் தமிழ் வேந்தர் 10 ஆவது இடத்தையும் (4 மணி 11 நிமி. 49 செக்.) பிடித்தனர். 

பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப்போட்டியை 1 மணித்தியாலம் 54 நிமிடங்கள் 32 செக்கன்களில் நிறைவு செய்த  நுவரெலியாவைச் சேர்ந்த  மோசஸ் ராகினி 9 ஆவது இடத்தைப் பிடித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற...

2025-04-18 01:22:12
news-image

18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-18 01:18:14
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தனது சொந்த மண்ணில்...

2025-04-18 01:14:18
news-image

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

2025-04-17 03:42:47
news-image

இலங்கைக்கு இரண்டாவது வெள்ளிப் பதக்கம்: பெண்களுக்கான...

2025-04-17 03:40:20
news-image

சுப்பர் ஓவரில் ராஜஸ்தான் றோயல்ஸை டெல்ஹி...

2025-04-17 03:38:02
news-image

பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தில் சர்ச்சை;...

2025-04-16 23:21:01
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-04-16 17:15:53
news-image

ஆசிய ஹொக்கி சம்மேளனக் கிண்ணம் 2025;...

2025-04-16 16:06:32
news-image

 யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க ...

2025-04-16 02:15:30
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் குறைந்த எண்ணிக்கைகள்...

2025-04-16 01:47:52
news-image

18இன் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-16 01:45:17