மூன்று பிரதான சூழ்ச்சிக்காரர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் - ரொஷான் ரணசிங்க

By T. Saranya

13 Dec, 2021 | 10:52 AM
image

(இராஜதுரை ஹஷான்)

2015 ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சி செய்தவர்கள் தற்போது அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். மூன்று பிரதான சூழ்ச்சிக்காரர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை பல முறை பகிரங்கமாக அறிவித்துள்ளேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை கூட்டணியின் பங்காளி கட்சியினர் முன்னெடுக்கிறார்கள். அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணாக செயற்படுபவர்களுடன் இணைந்து செயற்படுவது கடினமானது.

2015ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சியை முன்னெடுத்தவர்கள் தற்போது அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் மக்கள் மத்தியில் கருத்துரைக்கிறார்கள்.

அரசாங்கத்திற்குள் உள்ள மூன்று பிரதான அரசியல் சூழ்ச்சிக்காரர்களை வெளியேற்ற வேண்டும் என்பதை பலமுறை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளேன்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான பொருளாதார பாதிப்புக்களினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துள்ளது.

செயற்பாட்டு ரீதியில் ஏற்பட்ட குறைப்பாடுகளை அடிப்படையாக வைத்து அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ள அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் உள்ள பங்காளி கட்சியினர் அரசாங்கத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இடம்பெறவுள்ள தேர்தல்களில் விருப்பு வாக்கினை அதிகளவில் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணாக செயற்படுகிறார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஏனைய பங்காளி கட்சியினர் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க செயற்பட முடியாவிடின் கூட்டணியில் இருந்து தாராளமாக வெளியேறலாம் என பலமுறை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளோம். அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டு தொடர்ந்து அரசாங்கத்துடன் ஒன்றினைந்துள்ளார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33