கல்வித்துறையில் அரசியலை முழுமையாக இல்லாதொழித்து அத்துறை சுயாதீனமாக செயற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவே எதிர்காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக ஆசிரியர் இடமாற்றங்களோ அல்லது வேறுவிதமான நியமனங்களோ வழங்கப்படமாட்டாது என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவம் தெரிவித்தார்.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவதற்கு கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.