கபில் 

ப ஷில் ராஜபக்ஷ சந்திக்க முடியாமல் திரும்பிய இந்தியப் பிரதமரைச்சந்திப்பதற்குத் தான், இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக் குழுசெல்லவிருக்கிறது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம் சில நாட்களுக்குள்ஒழுங்குபடுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்தப் பயணம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து,கலந்துரையாடுவது, இந்திய வெளிவிவகார அமைச்சர், மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுக்களைநடத்துவது என இரண்டு கட்டங்களாக இருக்கும் என்று புதுடெல்லி தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடெல்லிக்குச் செல்லப் போகிறது,மோடியைச் சந்திக்கப் போகிறது என்று தகவல்கள் வெளியாகத் தொடங்கி மூன்று ஆண்டுகளாகிவிட்டன.

ஆனால், இதுவரை அந்தப் பயணம் இழுபறிக்குள்ளானதற்கு எல்லாத்தரப்புகளும் தான் காரணம்.

கடந்தவாரம் சந்திப்புக்கான ஒழுங்கு செய்யப்பட்ட போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இழுத்தடித்திருக்கிறது. மாவை சேனாதிராசாவையும் உள்ளடக்க வேண்டும் என்றநோக்கினால் சந்திப்பை பிற்போட்டிருக்கிறார் இரா.சம்பந்தன்.

அதுபோல, இந்தியப் பிரதமருக்கான நேர ஒழுங்குபடுத்தில் திட்டமிடல்குழப்பங்களினால் புதுடெல்லி அதிகாரிகளும் இழுபறிக்கு உள்ளாகினர்.

அதைவிட, இந்தப் பயணத் திட்டத்தை  குழப்பியடித்ததில்கொரோனாவுக்கும் கணிசமான பங்கு இருந்தது.

எல்லா நாடுகளும் தமது எல்லைகளை மூடிக் கொண்டு தற்காப்பு நிலையில்இருந்தமையால், தடைப்பட்டுப் போன இராஜதந்திர முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருந்தது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-12#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/