என்.கண்ணன்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் அண்மையில் நடத்திய சந்திப்புகள், பங்கேற்ற நிகழ்வுகள், ஜனாதிபதி தேர்தலுக்காக தொடங்கப்பட்ட பிரசாரமாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து வெளியேறிய சம்பிக்க ரணவக்க, இப்போது, 43 பிரிகேட் அல்லது 43 படையணிக்குத் தலைமை தாங்குகிறார்.

இது ஒரு அரசியல் அமைப்பு அல்ல. துறைசார் வல்லுநர்களின் அமைப்பு.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், இதே போன்று தான், வியத்மக, எலிய போன்ற அமைப்புகளை உருவாக்கி, தனக்கான ஆதரவுத் தளத்தை சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்பினார்.

அவரது அமைப்பு ஒருபோதும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் கூட்டங்களை நடத்தவோ, கருத்துக்களைப் பெறவோ இல்லை.

அவரைப் போன்றே சம்பிக்க ரணவக்கவும், 43 படையணியை உருவாக்கி தனக்கான அரசியல் தளத்தை உருவாக்கி வருகிறார்.

ஆனால் அவர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி என கூட்டங்களை நடத்தியிருக்கிறார். சந்திப்புகளை மேற்கொண்டிருக்கிறார்.

 அவற்றில் சில அரசியல் ரீதியானவை. சில நிலைமைகளை மதிப்பீடுகளை செய்வதற்கானவை.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி தெளிவாகக் கூறவில்லை. தாம் ஜனாதிபதி ஆகலாம், ஆகாமலும் போகலாம் என்றும் கூறியிருக்கிறார்.

தேர்தலுக்குக் காலம் இருக்கிறது, சரியான நேரத்தில் சரியான வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-12#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/