தனது மகள் மற்றும் தனது இரு பேத்திகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 78 வயதான நபருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவருக்கு மூன்று வருடம் மற்றும் ஆறுமாத சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரின் தண்டனையை தளர்த்துமாறு குறித்த நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் எந்தக் காரணம் கொண்டும் இப்படியான மோசமான குற்றத்தை செய்த நபரை விடுவிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட நபர் முதலில் தனது மூத்த மகளை 1960 ஆம் ஆண்டளவில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் மூத்த மகளின் முதல் மகளை 1980 ஆம் ஆண்டும் அவளின் தங்கையினை 2000 ஆம் ஆண்டும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் தனது மகளையும், இரு பேத்திகளையும் அவர்களின் 5 வயதில் இருந்து தொடர்ந்து பல வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.