எம்.எஸ்.தீன் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின்பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு மாற்றமாக வரவு,  செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு வாக்கெடுப்பில்ஆதரவாக வாக்களித்துள்ளமையால் இவ்விரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்றுநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளார்கள். அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின்உறுப்புறுரிமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இவ்விரு கட்சிகளும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது ஒழுக்காற்றுநடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அதன் இறுதி முடிவு மன்னிப்பில் தான் முடியுமென்றுஎதிர்பார்க்கப்படுகின்றது. 

ஒழுக்காற்று நடவடிக்கை என்பது கானல் நீராகவே முடியும்.

ஆயினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின்மீது அக்கட்சி கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 இதில்அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மிகவும் உறுதியாக இருப்பதாகவே தெரிகின்றது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-12#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/