(சசி)
பெல்வத்த சீனிதொழிற்சாலையில் வேலை செய்யும் அநேகமாநோருக்கு சிறுநீரக பாதிப்புள்ளதாக ஆய்வொன்றின் தகவல் தெரிவிக்கின்றது.

இதுவரையில் சிறுநீரக பாதிப்பால் 30 பேர் மரணித்துள்ளதுடன் 25 பேருக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும் உலக கடல் ஓரக் காணிகள் கொள்ளைக்கு எதிரான சர்வதேச அமைப்பும் இணைந்து நடத்திய கள ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக பெல்வத்த கொலனி மக்கள் தெரிவிக்கையில்,
நாம் காணிகள் இருந்தும் அதற்கான எந்தவிதமான ஒப்புக்களும் இல்லாமல் இருக்கின்றோம். எமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கும் குடிநீர் வசதி தேவையென்றாலும் பெல்வத்த சீனி தொழி ற் சாலையின் அனுமதியினை பெற வேண்டும் .

இங்கு எது நடந்தாலும் எமக்கு இருப்பது இந்த தொழிற்சாலை நிருவாகம் மட்டும் தான். அவர்கள் இன்று எம்மை அடிமைகளாக வைத்துள்ளர்கள்.
1985 ஆம் ஆண்டில் இருந்து விவசாயம் மற்றும் கரும்பு நடுகையில் ஈடுபடுபட்ட நாமே இந்த கொலனியில் வசித்து வருகின்றோம்.
இந்த நீரில் இருந்து இந்த நோய் வந்துள்ளதா அல்லது சீனி தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் இரசாயன கழிவுகளால் இந்த நோய் வந்துள்ளதா என்ற சந்தேகம் எமக்கு எழும்பியுள்ளது.
கடந்த கலங்களில் எங்களுக்கு கிணறுகள் இருந்தது அதில் நீரை பெற்றோம். தற்போது எங்களுக்கான குடிநீரைக்கூட சீனி தொழிற்சாலை நிருவாகமே வழங்குகின்றது.

இந்த நீரைக்கூட எங்கிருந்தோ எடுத்து வந்து எமக்கு தருகின்றனர். நாங்கள் வேறு வழியில்லாமல் அந்த நீரை அருந்துகின்றோம். அதனால் இந்த வருடத்தில் நாம் பலரை இழந்துள்ளோம். இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் வைத்திய அதிகாரிகளும் இரசாயனம் கலந்த தண்ணீர் மற்றும் கழிவுகள் இதற்கான கரணம் என்று தெரிவித்துள்ளனர் .
எம்மால் ஒன்றும் செய்ய முடியாதநிலை. எமக்கு வாழ்வதற்கு பணம் தேவை. ஆகவே தற்போது அதிகமான பெண்கள் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். அது போன்று எம்மால் உற்பத்தி செய்யப்படும் எங்களது கரும்புகளை இந்த தொழிற்சாலைக்கு விற்பனை செய்கின்றோம். அதைக்கூட ஒரு குறிப்பிட் ட தொகைக்கு எடுக்கின்றனர். இதனாலும் நாம் பாரிய துன்பத்துக்கு ஆளாகியுள்ளோம்.
இதை பற்றி அதிகமாகபேசினால் எமது கரும்புகளை வேறு இடத்துக்கு கொடுக்கும் படி கூறுகின்றனர். எம்மை வேலையை விட்டு வீட்டுக்கு செல்லும்படி சொல்கின்றார்கள் . நாங்கள் பெண்கள் என்பதால் எங்களை ஏமாற்று கின்றனரா?
இந்த தொழிற்சாலையில் 25 வருடம் தொழில் செய்து வருகின்றோம். ஆனால் எமக்கு வருத்தம் வந்தால் கூட எங்களுக்கு உதவி செய்வதில்லை. அவர்களது சுயநலம் பற்றியே சிந்திக்கின்றனர். இந்த முதலாளித்துவம் எம்மை போன்று துன்பத்தில் இருக்கும் சாதாரண மக்களை வதைக்கின்றது .
உயிரை காப்பாற்ற எங்களது உயிரை விடுகின்றோம் இதுதான் இந்த சீனி தொழிற்சாலையில் இடம்பெறுகின்றது. எம்மை அடிமைகளாக பார்க்கின்றனர். உயர் அதிகாரிகளை சந்திக்கப் போனால் ஏமாற்று கின்றனர். இன்று போய் நாளை வா என்கின்றனர். எத்தனை தடவை நாம் ஏமாறுவது.
நாங்கள் தனி நபர்கள் என்றால் வேறு இடத்தில் போய் வாழ முடியும். எமது பிள்ளைகளின் எதிர் காலமும் இன்று கேள்விக் குறியாகவுள்ளது.
எம்மை பார்ப்பதற்கு யாரும் இல்லை எங்களை கைவிட வேண்டாம். இந்த கொடிய நோயில் இருந்து எம்மை பாதுகாருங்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.