கொவிட் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் பசுமை விவசாயத்திற்கான மையமாக மாற்றம் - இராணுவத் தளபதி

Published By: Digital Desk 3

11 Dec, 2021 | 12:49 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் பசுமை விவசாயத்திற்கான செயற்பாட்டு மையமாக மாற்றப்பட்டுள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையின் கீழ் கடந்த ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் ஸ்தாபிக்கப்பட்டது. அன்றிலிருந்து கடந்த ஒரு வருடமும் 9 மாத காலமும் கொவிட் பரவலைத் தடுப்பதற்கான நடவக்கைகள் , தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் கொவிட் பரவலைத் தடுப்பதற்கான சகல ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் என்பன இந்த செயற்பாட்டு மையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் மற்றொரு தேசிய பணியை தொடர்வதற்காக மாற்றப்பட்டுள்ளது. அதற்கமைய கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் இறுதி ஒன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இது தொடர்பில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிக்கையில் ,

சுமார் இரண்டு வருடங்களாக நாடு எதிர்கொண்டுள்ள உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாம் குழுவாக அயராது உழைத்திருக்கின்றோம். இந்த காலப்பகுதிக்குள் 3 சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளோம். கண்ணுக்குத் தெரியாத வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் நாம் பாரிய சவால்களை எதிர்கொண்டோம். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு இடமளிக்கப்படவில்லை.

கொவிட் செயற்பாட்டு மையத்தினால் வழங்க்கப்பட்ட ஆலோசனைகள் , செயற்பாடுகளின் பிரதிபலனாக கொவிட் தொற்றாளர்களை முகாமைத்துவம் செய்தல், தொடர்பாலர்களை இனங்காணல், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் என்பவற்றோடு மக்களுக்கு தடுப்பூசி வழங்கல் என்பவற்றையும் வெற்றிகரமாக முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது. இதனால் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் நாட்டை முழுமையாகக் திறக்கக் கூடியதாகவும் உள்ளது.

சுகாதார அமைச்சு, மருத்துவ துறையினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோரினால் கொவிட் தொற்று கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு , 2022 ஆம் ஆண்டாகும் போது கொவிட் தொற்றிலிருந்து இலங்கை முழுமையாக மீளும் என்று நம்புகின்றோம்.

இவ்வாறான நிலையில் இந்த செயற்பாட்டு மையம் பிரிதொரு தேசிய பணிக்காக மாற்றப்படுகிறது. எனவே 1906 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் 1904 என்ற குறுஞ்செய்தி சேவை சுகாதார அமைச்சின் கீழ் உள்ளடக்கப்படுகிறது. 

புதிய செயற்பாட்டு மையத்தின் செயற்பாடுகளுக்காக விரைவில் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும். கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அனுபவம் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி பதிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும்.

கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அனைத்து வழிகளிலும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43