பிரான்ஸில் பிரபல மொடல் அழகி பாதையில் நடந்து செல்லும் போது அவரை முத்தம் கொடுக்க முயன்ற இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல மொடல் அழகியும், ரியாலிட்டி நட்சத்திரமுமான கிம் கர்டஷியன்(35) கடந்த செவ்வாய் கிழமை பாரிஸில் நடைபெற்ற பால்மைன் ஷோவிற்கு வருகை தந்துள்ளார்.

சற்று கவர்ச்சியாக கருப்பு நிறை உடை அணிந்து வந்த அவர் காரை விட்டு கிழே இறங்கி தனது பாதுகாவலர்களுடன் பேஷன் ஷோ நடக்கும் பகுதியை நோக்கி நடந்து சென்றுள்ளார்.

 

அப்போது எதிர் பாராதவிதமாக இருக்கையில் அமர்ந்திருந்த விடலி சித்துக் கிம்மின் பின் பக்கத்தில் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். 

கிம்முடன் வந்த பாதுகாவலர்கள் அவரை உடனடியாக பிடித்து கிழே தள்ளி அடித்து கண்டித்து அனுப்பியுள்ளனர்.

இதற்கு மொடல் அழகி கிம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாதுகாவலர்கள் தான் தன்னுடைய கடவுள் அவர்களுக்கு என்னுடைய நன்றி என தெரிவித்துள்ளார்.